Saturday, December 1, 2012

அரபு இஸ்லாமிய வசந்தத்தை முன்கொண்டு செல்லும் ஜனாதிபதி மூர்ஸியின் அதிரடி நடவடிக்கைகள்



-மஸிஹுதீன் இனாமுல்லாஹ்-
எகிப்தின் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி அதிரடியாக அறிவித்துள்ள அரசியலமைப்பு அறிவித்தல்கள் எகிப்திலும் சர்வதேச அரங்கிலும் முஸ்லிம் உலகிலும் கணிசமான கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது, உண்மையில் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம்  ஏற்பட்ட அரபு வசந்தம் கொண்டு வந்த அரசியல் மாற்றங்கள் எகிப்தில் முழுமை பெறாமல் இருந்தமைக்குப் பின்னால் இருந்த பிரதான தடைகளை நீக்குவதற்கு இவ்வாறான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதனைத் தவிர அதிபர் மூர்ஸியிற்கு வேறு வழிகள் இருக்க வில்லை என்றே கூற வேண்டும்.
அரபு வசந்தம் வெற்றியின் விளிம்பில் இருக்கும் பொழுது இடம் பெற்ற உள்ளக இராணுவ சதியொன்றின் மூலமே ஹுஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப் பட்டார்,புரட்சியை காவு கொண்ட உயர் இராணுவ கவுன்ஸில் நயவஞ்சகத்தனமாக முன்னால் சர்வாதிகாரியின் எச்ச சொச்சங்களினதும்  பிராந்திய சர்வதேச எஜமானர்களினதும் தேவைகேற்ப அரபு வசந்தத்தைக் கையாண்டனர், பல மாத இழுத்தடிப்புக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப் பட்ட பாராளுமன்ற கீழ் சபையை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவர முன்னரே கலைத்து விட்டனர்.


இஸ்லாமிய வாதிகளை பெரும்பான்மையாகக் கொண்ட பாராளு மன்றம் புதிய அரசியலமைப்பை வடிவமைப்பதற்காக நியமித்த அரசியலமைப்புக் குழு வினை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர், ஜனாதிபதிக்குரிய பல்வறு அதிகாரங்களை கையகப் படுத்திக் கொண்டது  மட்டுமல்லாமல்,  புதிய அரசியலமைப்பிற்கு ஏற்ப பாராளுமன்றத் தேர்தல்இடம் பெரும் வரை சட்டவாக்க அதிகாரத்தையும் தமக்கு கீழ் கொண்டு வந்தனர்.
அவர்களது சூழ்ச்சிகளுக்கு துணை போகின்ற  ஹுஸ்னி முபாரக்கின் அரசியலமைப்பு நீதிமன்றம், சட்டமா அதிபர்  ஆகியோரை பயன் படுத்தி அரபு வசந்த ஆர்ப்பாட்டக் காரர்களைக் கொன்று குவிக்கவும் அவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடவும் காரணமாக இருந்தவர்கள் தப்பித்துக் கொள்ள வழி வகுத்தனர்.
இவற்றை எல்லாம் மிஞ்சிய ஒரு சூழ்ச்சியிலும்  இந்த உயர் இராநிவ கவுன்சில் ஈடு பட்டிருந்தது, அதாவது கலைக்கப் பட்ட பாராளுமன்ற அரசியலமைப்புக் குழுவில் இருந்து இஸ்லாமிய வாதிகளின் செல்வாக்கைக் குறைத்தல், அல்லது அதனை செயற்படாமல் தடுத்து தொடர்ந்தும் சட்டவாக்க அதிகாரத்தை தாம் தக்க வைத்துக் கொள்ள சகல நடவடிக்கைகளையும் எடுத்தனர். லிபரல் வாதிகள் அந்த அரசியலமைப்புக் குழுவிலிருந்து விலகினர் , புதிய அரசியலமைப்பு  நகல் யோசனைகளுக்கு எதிராக ஹுஸ்னி முபாரக்கின்  அரசியலமைப்பு  நீதி மன்றில் ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்தனர், இவ்வாறு பல   சதிகளைச் செய்து அடுத்த பாராளுமன்றத்தில் இஸ்லாமிய வாதிகளின் செல்வாக்கைக் குறைத்து  அஹ்மது ஷபீக் ஆதரவாளர்களான ஹுஸ்னி முபாரக்கின் எச்ச சொச்சங்களின் வலிமையை கூட்டுதல் அதற்கேற்றாற்போல் சட்டமா அதிபரையும் அரசியலமைப்பு நீதி மன்றத்தையும் பயன் படுத்தல்.
இந்த சூழ்ச்சிகளில் இருந்து அரபு வசந்தத்தையும், நாட்டையும் காப்பாற்றுவதற்கு இருந்த ஒரே வழி :
 அரசியலமைப்பு நீதிமன்றத்தைக் கலைத்தல்
சட்டமா அதிபரை பதவி நீக்கல்
சட்டவாக்க அதிகாரத்தைக் கையகப் படுத்தல்
அரசியலமைப்புக் குழுவினை பாதுகாத்து வலிமைப் படுத்தல்
அரபு வசந்தத்தை அடக்குவதற்காக இரானுவத்தியும் வன்முறையையும் பயன்படுத்திய ஹுஸ்னி   முபாரக் உற்பட சகலரையும்   மீண்டும் விசாரணைக்கு உற்படுத்துதல்..அவர்கள் மீனும் மீண்டும் தலை  தூக்குவதை சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தல்.!
எட்டு மாதத்திற்குள் புதிய அரசியல் யாப்பை தயாரித்து பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு விடுதல்
அந்த புதிய யாப்பிற்கு ஏற்ப பாராளுமன்ற தேர்தலை நடாத்தி சட்டவாக்க அத்கிகாரத்தை பாராளு மன்றத்துக்கு வழங்குதல் 
அதன் பிரகாரம் உயர் நீதிமன்றத்தை மீளமைத்து நீதித் துறையின் சுயாதிபத்தியத்தை ஸ்தாபித்தல்
இடை நடுவில் இந்த நகர்வுகளை இராணுவ கவுன்ஸிலோ அரசியலமைப்பு  நீதி மன்றமோ தலையிட முடியாதவாறு இந்த அறிவிப்புக்களை  எந்த ஒரு அதிகார பீடமும் கேள்விக்கு உற்படுத்த முடியாதென பிரகடனம் செய்தல்.
அதுவரை மேற்படி இலக்குகளை அடைந்துகொள்ள  தேவைப்படுகின்ற சட்டவாக்க அதிகாரங்களை ஜனாதிபதி கொண்டிருத்தல்.
இந்த இலக்குகள் அடையப் பெற்றவுடன் தனது பிரகடனங்கள் தானாகவே  வலிததற்றதாகிவிடும் எனவும் ஜனாதிபதி   மூர்ஸி அறிவித்துள்ளார்.
இத்தகைய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள காஸா வின் போராளிகள் ஜனாதிபதி முர்ஸியிற்கு பெரிதும் உதவியுள்ளார்கள்..! இஸ்ரவேலையும் சர்வதேச சமூகத்தையும் மண்டியிடச் செய்ததன் மூலம்  சர்வதேச அரங்கில் அரபு வசந்தத்திற்குப் பின்னரான எகிப்திய அரசிற்கு ஜனாதிபதி மூர்ஸியிற்கு மிகவும் சாதகமான கள நிலவரங்களை மாத்திரமல்லாது இராஜ தந்திர வலிமையையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
ஜானதிபதி மூர்ஸி முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரியை கூடிய விரைவில் முன் வைப்பார், சகல அதிகாரங்களையும் கையிலெடுத்துள்ள அவர் அவற்றை உரிய நிறுவனங்களிடம் மீண்டும் அமானிதமாக ஒப்படைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. சகலவித சவால்களையும் முறியடித்து வெற்றிமேல் வெற்றிகளை இஸ்லாமிய உலகிற்கு கொண்டு வர  ஜனாதிபதி மூர்ஸி அவர்களுக்கும்  அவர்களது கூட்டணியிலுள்ள அத்தனை இஸ்லாமிய சக்திகளுக்கும் எல்லாம் வல்ல அல்லா துணை நிற்பானாக.

No comments:

Post a Comment