Saturday, December 1, 2012

மனித இயல்பினை நோக்கி...


ஷஹீத் சையித் குதுப்
தமிழில்: அஷ்-ஷெய்க் எஸ்.எச்.எம் ஃபழீல்

இஸ்லாமிய சிந்தனை
ஓக்டோபர்-டிசம்பர் 2001




'நிச்சயமாக அல்லாஹ் (அத்ல்) நீதி செலுத்துமாறும் (இஹ்ஸான்) நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்குக் கொடுத்துதவுமாறும் (உங்களுக்குக்) கட்டளை பிறப்பிக்கிறான். மேலும் (பஹ்ஷாஉ) மானக்கேடான காரியங்கள், (முன்கர்) பாவச் செயல்கள், (பக்ய்) அத்துமீறல்கள் என்பவற்றில் ஈடுபட வேண்டாம் எனத் தடுக்கிறான். நீங்கள் நினைவுகூர்ந்து சிந்திப்பதற்காக இவ்வாறு உபதேசம் செய்கிறான்.'
(அந்நஹ்ல்: 90)


அல்குர்ஆன் எனும் வேதநூல் ஓர் உம்மத்தை உருவாக்க, ஒரு சமூகத்தை ஒழுங்குற அமைப்பதற்காக வந்ததாகும். அதுமட்டுமன்றி ஒரு பிரத்தியேகமான ஓர் உலகை அது கட்டியெழுப்ப வந்ததாகும். அது முன்வைக்கும் தூது சர்வதேச தன்மை கொண்டது. முழு மனித சமூகத்துக்குமானது. எனவே, ஒரு கோத்திரத்திற்காக, குழுவுக்காக இனத்துக்காக பக்கச்சார்பாக, ஓரவஞ்சனையாக நடப்பது அதன் போக்கல்ல. முhறாக 'அகீதா' எனும் நம்பிக்கைக் கோட்பாடு மட்டுமே சகலரையும் பிணைக்கும் கயிறாயவும் தளமாகவும் அமையும். ஆதற்காகவே மனிதன் உழைக்க வேண்டும். ஆதற்குச் சார்பாகவே சிந்திக்க வேண்டும். ஆதனை ஏற்றவர்களைக் கொள்கைவழி சகோதரர்களாகக் கணித்து அவர்களைப் பிணைக்கும் அம்சங்களை அவர்கள் மத்தியில் வளர்க்க அந்தக் குர்ஆன் முயற்சி செய்கிறது.




அந்தவகையில் நீதி (அத்ல்) என்பது பிரதான இடத்தை வகிக்கிறது. நீதி ஒவ்வொரு தனிமனிதனும் குழுவும், சமூகமும் பரஸ்பரம் உறுதியான அடித்தளத்தின் மீது நின்றவண்ணம் தொடர்புகளை வைத்துக் கொள்ள வழிசெய்கிறது. ஆங்கு மனோ இச்சைக்கு இடமிருப்பதில்லை. துனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு செல்வாக்கிருப்பதில்லை. இரத்த உறவு, திருமண உறவுகளால் அந்த நீதி மாற்றமுறுவதில்லை. ஏழ்மை செழுமை, பலம் - பலவீனம் என்பவற்றால் தாக்கமுறுவதில்லை. அது அனைவரையும் ஒரே பார்வையால் பார்க்கிறது. ஒரே துலாக் கோலால் அளவீடு செய்கிறது.


நீதிக்கு அருகாமையில் (இஹ்ஸான்) நன்மை செய்வது என்பது இருந்த வண்ணம் முஸ்லிம் சமூகத்தைப் பலப்படுத்துகிறது. 'இஹ்ஸான்' என்பது அரபு மொழியில் மிகவும் விரிந்த பொருளில் பிரயோகிக்கப்படுகிறது. நுற்கருமங்கள் அனைத்தும் 'இஹ்ஸான்' ஆகும். முனித நடத்தைகள், தொடர்புகள், உறவுகள் அனைத்திலும் 'இஹ்ஸான்' எனும் பண்பைக் கடைப்பிடிக்கும்படி இங்கு பொதுவாகவே அல்லாஹ் கட்டளை பிற்ப்பிக்கிறான். ஆடியான் ரட்சகனுடன் தொடர்பு கொள்ளும் போதும், தனது குடும்பத்துடன், சமூகத்துடன் ஏன் முழு மனித இனத்துடன் தொடர்பு கொள்ளும் போதும் இந்த 'இஹ்ஸான்' அவசியப்படுகிறது.


நீதியை மிகச் சரியாக அச்சொட்டாகப் பின்பற்றுவதால் சமூக உறவுகளில் ஏதும் இறுக்கங்கள் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே இவ்வசனத்தில் இந்த இஹ்ஸான் என்பது குறிப்பிடப்படுகிறது. ஒருவர்  தன்பக்கம் நீதியிருந்தாலும் தனது சில உரிமைகளை விட்டுக் கொடுத்து பிறருடன் சகிப்புத் தன்மையாக நடந்து கொள்வதற்கு இந்த 'இஹ்ஸான்' வழிவகை செய்கிறது. இப்படி நெகிழ்ந்து கொடுப்பதனால் உள்ளங்களை வெல்ல முடிகிறது. இதயங்களிலுள்ள வஞ்சகங்களை கழைய முடிகிறது. துனக்கு வந்துசெர வேண்டிய நீதிக்கும் மேலாகச் சென்று உள்ளம் புண்பட்டவர்களை ஒருவர் அரவணைக்க, உபகாரம் செய்ய விரும்பினால் அவருக்கு இஹ்ஸான் என்ற வாயில் எப்போதும் திறந்தேயிருக்கின்றது.


இஹ்ஸான் என்ற வட்டத்தினுள் வரும் இன்னுமோர் அம்சம் பற்றி அல்லாஹ் அடுத்து பிரஸ்தாபிக்கிறான். அதுதான் 'உறவினர்களுக்குக் கொடுத்து உதவி செய்தல்' என்பதாகும். இந்த விடயத்தின் முக்கியத்துவம் கருதியும் அதனை வலியுறுத்த வேண்டும் என்பதற்காகவுமே இங்கு இது வெளிச்சப்படுத்திக் காட்டப்படுகிறது. முhறாக ஒருவர் தனது குடும்ப உறவினர்களை வெறிபிடித்து ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. ஒருவர் சமூகக் கூட்டுறவைப் பேண வேண்டும். சேமநல விவகாரங்களில் ஈடுபட வேண்டும் என இஸ்லாம் விரும்புகிறது. ஆப்படியாயின் அவன் தனக்கு அண்மையில் இருப்பவர்களை முதலில் கவனித்த பின்பே தூர இருப்பவர்களை கவனிக்க வேண்டுமென்ற 'படிமுறை' அமைப்பை முஃமின் கடைபிடிக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.


'மானக்கேடான காரியங்கள் (பஹ்ஷாஉ), பாவச் செயல்கள் (முன்கர்), அத்துமீறல்கள் (பக்ய்) என்வற்றில் ஈடுபட வேண்டாம் என்று அவன் தடுக்கிறான்' 'பஹ்ஷாஉ' எனும் சொல் வரம்புமீறிச் செயற்படும் அனைத்துச் செயல்களையும் குறித்தாலும் இங்கு நற்பெயருக்கு களங்கம் உண்டுபண்ணும் அயோக்கியத் தனத்தையே இது குறிப்பாகக் காட்டி நிற்கிறது. ஏனெனில் இந்த அத்துமீறும் நடவடிக்கை மானக்கேடான செயல்களுக்கு இட்டுச் செல்லும் என்பதனாலாகும்.


இங்குள்ள 'முன்கர்' என்பது மனித இயல்பு சீரணிக்க மறுக்கும் அனைத்துக் காரியங்களையும் குறிக்கும். இப்படியான காரியங்களை ஷரீஆவும் நிராகரிக்கிறது. ஏனெனில், அது இயல்பு மார்க்கம் என்பதனாலாகும். சிலபோது மனித இயல்பு வழிதப்பினாலும் ஷரீஆ ஆஸ்திரமாக இருக்கும். சீரான அடித்தளத்தின்பால் அந்த மனித இயல்பை வழிநடாத்திச் செல்லும்.


அடுத்து 'பக்ய்' என்பது அநீதியையும் சத்தியத்தையும் நீதிநியாயத்தை விட்டு விலகுவதையும் குறித்து நிற்கிறது.


ஏந்தவொரு சமூகமும் பஹ்ஷாஉ, முன்கர், பக்ய் என்பவற்றினடியாக எழுந்து நிற்க முடியாது. இவற்றின் தன்மைகளில் எந்தவொன்றாவது ஒரு சமூக அமைப்பில் பரவலாக இடம்பெறுமாயின் அச்சமூகம் நிலைக்காது.


இந்த மூன்று நாசகாரச் சக்திகளும் எவ்வளவு பலமிக்கவையாக நின்று சமூகத்தை ஆட்சி செய்து வந்தாலும், இவற்றைக் கட்டிக்காக்க அத்துமீறும் ஆட்சியாளர்கள் எத்தகைய சாதனங்களைப் பயன்படுத்தினாலும் இந்த மூன்று சக்திகளது அமுக்கத்திலிருந்து மனித இயல்பு எப்போதாவது எழுச்சி பெற்று வீறு கொண்டெழும் என்பதில் சந்தேகமில்லை. முழு மனித இன வரலாற்றை எடுத்து நோக்கினாலும் இம்மூன்று நாசகாரிகளுக்குமெதிரான எழுச்சிப் போராட்டங்களையே காண முடிகிறது. இம்மூன்றின் அடியாக சில நாடுகள் சில காலங்களாக எழுந்து நின்றாலும் நாம் அதற்காக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இம்மூன்றுக்குமெதிரான எழுச்சிப் போராட்டங்கள் உலகில் அவ்வப்போது நடந்தேறுவதானது இவை மூன்றும் மனித வாழ்வுக்கு ஒவ்வாத அந்நியமானவை என்பதற்கு சிறந்த சான்றாகும். எனவேதான் அவற்றை விரட்டியடிக்க மக்கள் தூசு தட்டிக்கொண்டு எழுகிறார்கள். உயிருள்ள உடம்பு தனக்கு அந்நியமான ஓர் எதிரி தனக்குள் நுழைய முனையும் போது துடித்துக்கொண்டு எழுவது போன்ற நடவடிக்கையே இதுவாகும். அத்ல் (நீதி), இஹ்ஸான் (நன்மை புரிதல்) ஆகியவற்றை மேற்கொள்ளும்படி கட்டளையிட்டிருப்பதானதும், பஹ்ஷாஉ, முன்கர், பக்ய் ஆகியவற்றைத் தடை செய்திருப்பதானதும் சீரான, ஆரோக்கியமான மனித இயல்புக்கு இவ்வழிமுறையே பொருந்தி வரும் என்பதனையும் அதுதான் அதனைப் பலப்படுத்தும் என்பதனையும் இறைவனின் நாமத்தால் தன்னை அது தற்காத்துக்கொள்ள அதனைத் தூண்டும் என்பதனையும் உணர்த்துகிறது. எனவே அல்லாஹ் இப்பகுதியை 'நீங்கள் நினைவுகூர்ந்து சிந்திப்பதற்காக உங்களுக்கு இவ்வாறு உபதேசம் செய்கிறான்' என முடிவிக்கிறான். இதை ஏன் இவ்வாறு முடிக்கிறான்? முனிதன் மறந்திருக்கும் ஓர் அம்சத்தை ஞாபகமூட்டவே இவ்வாறான வசனங்கள் கூறப்படுகின்றன. முனிதன் தனது அடிப்படை இயல்பு நோக்கி மீள வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

No comments:

Post a Comment