Sunday, December 23, 2012

எகிப்தின் புதிய யாப்பு பொதுஜன வாக்கெடுப்பில் வெற்றி!


புரட்சிக்குப் பிந்திய எகிப்தின் புதிய யாப்பு மீதான பொதுஜன வாக்கெடுப்பின் இரு கட்டங்களும் முடிவுற்ற நிலையில் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 63.6% ஆனோர் யாப்பை ஆதரித்து வாக்களித்திருப்பதாகவும் 36.4% ஆனோர் யாப்பை எதிர்த்து வாக்களித்திருப்பதாகவும் தெரியவருகிறது.

முதற்கட்ட வாக்கெடுப்பின் போது 56.3% ஆனோர் யாப்பை ஆதரித்திருந்த போதும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின் போது 70.9% ஆனார் யாப்பை ஆதரித்து வாக்களித்திருந்தனர். வெளிநாடுகளில் வாழும் எகிப்தியர்கள் அளித்த வாக்குகளில் 67.5% ஆனவை யாப்பை ஆதரித்திருந்ததோடு 32.5% ஆனவை யாப்பை எதிர்த்திருந்தன.

எகிப்தின் 27 மாகாணங்களில் கெய்ரோ, மனூபியா ,கர்பியா ஆகிய மாகாணங்கங்களைத் தவிர ஏனைய அனைத்தும் யாப்பை ஆதரித்தே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment