Wednesday, December 5, 2012

அரபு வசந்தமும் இஸ்லாமிய இயக்கமும் - சில குறிப்புக்கள்








இந்த ஆண்டின் முதற்கூறுகளில் அரபுலக புரட்சிகள் மிகவும் வேகமாகப் பரவத் தொடங்கின. எகிப்தின் தஹ்ரீர் சதுக்கம்யெமனின் தக்யீர் சதுக்கம் என்பன அன்றாட செய்திகளில் அதிகம் உச்சரிக்கப்படும் சொற்களாயின. முஸ்லிம,; முஸ்லிம் அல்லாதோர் என அனைவரும் மத்திய கிழக்ககை நோக்கி தமது கவனங்களை குவிக்கத் தொடங்கினர். அப்போது சிலர் இதனை இஸ்லாமியப் புரட்சி என்றும் வேறு சிலர் மதச்சார்பற்றவர்களின் புரட்சி என்றும் பேசலாயினர். இருப்பினும்இன்று அரபுலக புரட்சிகளில் அதிகம் இலாபமடைந்தது இஸ்லாமியவாதிகளே என்பது தெளிவாக தெரிகின்றது. தூனிஸியாமொரொக்கோஎகிப்து ஆகிய நாடுகளின் தேர்தல் முடிவுகள் இதற்கான சிறந்த சான்றுகள். இந்தப் பின்னணியோடு இஸ்லாமிய உலகில் செயற்படும் சில இஸ்லாமிய இயக்கங்கள் குறித்த சில அறிமுகங்களை நோக்குவோம்.



அல்இக்வானுல் முஸ்லிமூன் - எகிப்து


Dr. முஹம்மத் பதீஃ
துருக்கியிலிருந்த இஸ்லாமிய கிலாபத் 1924 ம் ஆண்டு ரத்துச் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இஸ்லாமிய உலகெங்கும் இஸ்லாமிய இயக்கங்கள் உருவாகலாயின. அந்தப் பின்னணியில் எகிப்தில் இஸ்லாத்தை ஒரு பூரண வாழ்க்கைத் திட்டமாக முன்னிறுத்தி 1928 ல் தோற்றுவிக்கப்பட்டதே அல்-இக்வானுல் முஸ்லிமூன் என்ற இயக்கம். இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) என்ற பாடசாலை ஆசிரியரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் இஸ்லாமிய இயக்கங்களின் தாய் என்று வர்ணிக்கப்படுமளவுக்கு மிகவும் பிரசித்தமானது.

இன்றைய பல அரபுஇஸ்லாமிய நாடுகளில் இந்த இயக்கம் பரவியிருக்கின்றது. சிரியாலெபனான்ஜோர்தான்பலஸ்தீன் என நீண்டு செல்லும் அரபு நாடுகளிலும் அரபு நாடுகளல்லாத முஸ்லிம் நாடுகளிலும் இந்த இயக்கம் செயற்படுகின்றது. அல்-இக்வானுல் முஸ்லிமூன் இயக்கம் தனிமனித உருவாக்கம்முஸ்லிம் குடும்பம்இஸ்லாமிய சமூகம்அரசை சீர்திருத்தல்இஸ்லாமிய தேசம்உலகை வழிநடாத்தல் ஆகிய படிமுறைகளை கடைபிடிக்கின்றது.

இதன் பொது வழிகாட்டியாக (தலைவராக) தற்போதுனுச. முஹம்மத் பதீஈ அவர்கள் செயற்படுகிறார். மாறி மாறி வந்த அனைத்து எகிப்திய ஜனாதிபதிகளாலும் மிகவும் துன்புறுத்தப்பட்டு வந்த அல்-இக்வானுல் முஸ்லிமூன் இயக்கம் ஏகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் பதவி விலகியதன் பின்னர் எகிப்தில் 'சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சிஎன்ற பெயரில் ஒரு கட்சியை ஸ்தாபித்தது. புரட்சியைத் தொடர்ந்து நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்தக் கட்சியை சேர்ந்த கலாநிதி முஹம்மத் முர்ஸி வெற்றி பெற்றுள்ளார்.



நஹ்ழா இயக்கம் - தூனிஸியா


1972 காலப் பகுதியில் தூனிஸியாவில் நிறுவப்பட்ட இந்த இயக்கம் தூனிஸியாவில் பிராதான இஸ்லாமிய இயக்கமாகும். நஹ்ழா இயக்க அங்கத்தவர்கள் தூனிஸிய ஆட்சியாளர்களால் தொடர்ந்தும் சிறைபிடிக்க்பட்டும் துன்புறுத்தப்பட்டும் வந்தனர். அத்தோடு இந்த இயக்கம் தூனிஸியாவில் தடை செய்யப்பட்டிருந்தது. 2011 மார்ச் மாதத்தில் ஸைனுல் ஆப்தீன் பின் அலி ஜனாதிபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்பு இந்த இயக்கத்துக்கான தடை நீக்கப்பட்டது.
ஷெய்க் ராஷித் அல்கன்னூஷி









இன்றைய இஸ்லாமிய உலகில் மிகப் பெரும் அரசியல் சிந்தனையாளராக மதிக்க்பப்டும் ஷெய்க் ராஷித் அல்-கனூஷி மற்றும் அப்துல் பத்தாஹ் மோரோமுன்ஸிஃப் பின் ஸாலிம் ஆகியோரால்  ஸ்தாபிக்க்பபட்டட இந்த இயக்கம் தூனிஸியர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருக்கின்றது. நாடு துறந்து லண்டனில் வசித்து வந்த இதன் தலைவர் கனூஷி அவர்கள் புரட்சியின் பின்னர் நாடு திரும்பினார். புரட்சியின் பின்னர் நிகழ்ந்த யாப்பு சபைக்கான தூனிஸியத் தேர்தலில் நஹ்ழா கட்சி 41.47மூ வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. பின்னர் எதிர்க்கட்சிகள் சிலதையும் இணைத்துக் கொண்டு தற்போது ஆட்சி நடாத்துகின்றது.


நஹ்ழா இயக்கம்அல்-இக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தூனிஸியக் கிளையாகவும் பலரால் கருதப்படுகின்றது.










நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி– துருக்கி


 ரஜப் தைய்யிப் அர்தூகான்
துருக்கியில் செயற்பட்டு வந்த இஸ்லாமிய கிலாபத்கமால் அதாதுர்க் என்பவனால்1924ம் ஆண்டு ரத்துச் செய்யப்பட்டு துருக்கி மேற்கத்தேய கலாசாரத்தினைப் பின்பற்றும் ஒரு நாடாக மாற்றப்பட்டது. என்றாலும் துருக்கிய மக்களின் மனங்களிலிருந்த இஸ்லாமிய உணர்வுகள் அவர்களை செயற்படத் தூண்டின. தொடர்ந்து வந்த காலங்களில் பலர் இஸ்லாத்தை முன்னிறுத்தி செயற்பட முனைந்தனர். இருப்பினும் கடுமையான மதச்சார்பற்ற நாடாக மாற்றப்பட்டிருந்த துருக்கி இஸ்லாமிய அரசியல் செயற்பாடுகளை முடக்குவதில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டு வந்தது.


இந்தப் பின்னணியில்தான் துருக்கிய இஸ்லாமிய அரசியல் முன்னோடியாகக் கருதப்படும் பேராசிரியர் நஜ்முத்தீன் அர்பகான் அவர்களால் நிறுவப்பட்ட ரஃபாஹ்ஃபழீலா போன்ற இஸ்லாமியக் கட்சிகள் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டு வந்தன. இந்தக் கட்சிகளில் இணைந்து செயற்பட்டவர்தான் தற்போதைய துருக்கிப் பிரதமர் ரஜப் தைய்யிப் அர்தூகான். துருக்கியின் Rize என்ற கிராமத்தில் பிறந்து தனது 13 வயதில் குடும்பத்தோடு ஸ்தான்புல் நகரில் குடியேறிய இவர் மிகுந்த பொருளாதாரக் கஷ்டங்களுக்கு மத்தியில் ஸ்தான்புல் மர்மரா பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பீடத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.

பல்கலைக்கழகத்தில் கற்கும் போது பேராசிரியர் அர்பகானை சந்தித்த இவர் அர்பகானோடு சேர்ந்து செயற்பட்டார். 1994 நிகழ்ந்த தேர்தலில் ஸ்தான்புல் நகர மேயராக தெரிவு செய்யப்பட்ட இவர்தனது அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் மிகுந்த மக்கள் செல்வாக்கைப் பெற்றுக் கொண்டார். கடுமையான மதச்சார்பின்மையைப் பின்பற்றும் துருக்கியில் ஒரு கூட்டத்தில் இஸ்லாமியக் கவிதை ஒன்று வாசித்தார் என்ற குற்றச்சாட்டில் சிறை செல்ல நேரிட்டார் அர்தூகான்.


தனது ஆசான் பேராசிரியர் நஜ்முத்தீன் அர்பகானின் பாணியில் நேரடி இஸ்லாமிய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது துருக்கிய யாப்பின்படி தற்போதைக்கு சாத்தியமில்லை என்று கருதிய அர்தூகான்அர்பகானின் கட்சியிலிருந்து பிரிந்த சிலரை இணைத்துக் கொண்டு 2001 ம் ஆண்டு 'நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சிஎன்ற பெயரில் ஒரு கட்சியை நிறுவினார். 2002 ம் ஆண்டு நிகழ்ந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வந்த இந்தக் கட்சி தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும் தற்போது ஆட்சிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.


இந்தக் கட்சி நேரடி இஸ்லாமியக் கருத்துக்களை வெளியிட்டு வராவிடினும் அதன் நகர்வுகள் அனைத்தும் ஒரு இஸ்லாமிய தேசத்தை நோக்கியதாகவே இருக்கின்றன.


அல்-இக்வானுல் முஸ்லிமூன் - சிரியா

1930 களில் சிரியாவில் அல்இக்வானுல் முஸ்லிமூன் இயக்கம் நிறுவப்பட்டது. எகிப்தில் இமாம் ஹஸனுல் பன்னா அவர்களால் நிறுவப்பட்ட இயக்கத்தின் கிளையான இதன் முதலாவது கண்காணிப்பாளராக (தலைவராக) பிரபல இஸ்லாமிய அறிஞர் கலாநிதி முஸ்தஃபா ஸிபாஈ அவர்கள் செயற்பட்டார்கள்.

உலகின் ஏனைய பகுதி இஸ்லாமியவாதிகளைப் போன்று இவர்களும் சிரிய அரசால் துன்புறுத்தப்பட்டனர். சிரியாவின் ஹமா நகரில் இக்வான் இயக்கத்தவர்கள் நூற்றுக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது சிரியாவில் அரசுக்கு எதிராக நிகழ்ந்து வருகின்ற புரட்சியில் சிரிய நாட்டு இக்வான் முன்னணியில் நின்று செயற்படுகின்றனர். சிரிய புரட்சிக் குழுக்களை ஒன்றிணைத்து உருவாக்ப்பட்டுள்ள சிரிய தேசிய சபையில் சிரிய நாட்டு இக்வான்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர்.


***            ***            ***


இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்ற அனைத்து இயக்கங்களும் இஸ்லாத்தை ஒரு வாழக்கைத் திட்டமாக முன்வைத்து செயற்படுகின்றன. அவை வெறுமனே அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல. உலகில் மனிதன் பொருளாதாரம்கல்விசுகாதாரம்விஞ்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முன்னேறி உலகில் ஒரு சிறந்த நாகரிகம் மீண்டும் உருவாக்க்ப்பட வேண்டும் என்பதற்காக இஸ்லாத்தை அவை தீர்வுத் திட்டமாக முன்வைக்கின்றன. வீழ்ச்சி நிலையில் இருக்கின்ற முஸ்லிம் உலகை மீண்டும் எழுச்சி பெறச் செய்யும் திட்டம் இஸ்லாத்திடம் இருப்பதாக அவை நம்புகின்றன. இனி வரும் காலம் இஸ்லாமிய நாகரிகத்தின் எழுச்சிக்குரிய காலமாக அமையும் என அவை நம்புகின்றன.

No comments:

Post a Comment