Tuesday, December 25, 2012

திஹாரியும் குப்பையும்: ஒரு செய்தி!

தொடங்க போக்கலே குப்பய பத்திதாக் பேச வேண்டிய நெலம! தார்ட செல்லவன்?!

சரி, எல்லாருக்கும் ஒன்னாவது ஏன்ட ஸலாத்த செல்லிக் கொளுகுறன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

திஹாரி வந்து கொழும்பு கெண்டி ரோட்ல கொழும்பிலீந்து வர போக்கல ஈக்கிய ஒன்னாவது முஸ்லிம் ஊர். சனத்தொக 15,000 என்டு ஒரு சேர் சென்ன. போர்த்துக்கேய ஆக்கள் கொழும்புகு 1505 ல வந்து எறங்கின டைம் அங்கீந்த முஸ்லிம் ஆக்களுக்கு கொடும செஞ்ச. அப்ப அங்கீந்த முஸ்லிம் ஆக்கள் திஹாரிக்கு வந்து ஊடுகள கெட்டிகொண்டு வாழ தொடங்கினாம். இபிடிதானாம் திஹாரிகி முஸ்லிம் ஆகள் வந்தென்டு செல்லுற.

சரி விஷயத்துக்கு வரோம்!



நான் என்னான் செல்லப்போறன்டா திஹாரில சரியான மட்டு குப்ப சேருற. அத ஒழுங்கா மேய்டன் பண்ணுற மாதிரி வெலங்கல்ல. கட்டாயம் ரோட்லதான் குப்ப போடனும் என்ட மாதிரிதான் நெறய பேர் நடந்து கொளுற மாதிரி ஈக்கிய. ஆனா, அவங்கட ஸைட்லயும் நெறய நியாயங்கள் ஈக்கும். தாருக்கும் ஒழுங்கா தேடி பாக்காம குத்தம் செல்லேலா.

ஆனா, திஹாரில குப்ப பிரச்சினய முடிவுக்கு கொண்டு வாரத்துக்கு எனமாலும் செய்யோனும். ஏன்டா ரோட்ல போக்கல நெறய எடத்துல குப்ப போட்டீக்கியத காணேலும். வெளில ஈந்து வார ஆக்கள் குப்பய பாத்துடு திஹாரி சுத்தம் இல்லாத ஊர் என்டு செல்லுறாம் என்டு நெறய பேர் செல்லீகிய.

குப்பயால நெற நோய்கள் வார விஷயமும் எங்களுக்குத் தெரியும்.

நான் இங்க இன்னொரு விஷயத்தேம் செல்லோனும் Credence Foundation என்டு செல பொடியன்மார் க்ரூப் ஒன்டு குப்ப போடுறதுகு பெரல்கள் வெச்சீகிய. அந்த பொடியன்மார பாராட்டோனும்.

ஆனா, குப்ப பிரச்சினய இல்லாமாக்க இன்னம் கொஞ்சம் எல்லாரும் சேந்து எக்டிவ்வா வேல செய்யோனும் என்டு நா நெனக்கிய...

திஹாரில நெற இஸ்லாமிய இயக்கங்கள் ஈக்கிய. இவங்க இன்னம் தொழுகை, நோன்பு பத்தி மட்டும் பயான் பண்ணாம, சூழல சுத்தமா வெக்கியது, திஹாரிய பசுந்தாக்குறது பத்தியெல்லாம் பயான் செய்யோனும். ஏயென்டா அதுகும் எங்கட மார்க்கம் செல்லுற விஷயங்கள்தான். எனேம்ட ஒங்களுகளுக்கு இது நல்லா தெரியுமா ஈக்கும்...

குப்ப விஷயத்துல செய்ய வேண்டிய செல விஷயங்கள் எனக்கு லைட்டா பட்ட. அதுல ஒன்டு ரெண்ட செல்லுறன்... ஏலுமென்டா அதேம் கொஞ்சம் கவனத்துல எடுங்கோ...

1.             பள்ளிகள்ல சூழல சுத்தமா வெக்கியது பத்தி பயான்கள் செய்ங்கோ

2.             ஊடு ஊடா பெய்த்து இதுட விபரீதத வெலங்கபடுத்துங்கோ


சரி, இன்னொரு நாளக்கி சந்திச்சோம்.. பெய்த்து வாரன்..

ஜஸாகுமுல்லாஹு ஹைரன்!

No comments:

Post a Comment