Tuesday, February 5, 2013

வளைகுடா நாடுகளது விவகாரங்களில் ஈரான் தலையிடத் தேவையில்லை: ஷெய்குல் அஸ்ஹர் தெரிவிப்பு



வளைகுடா நாடுகளது விவகாரங்களில் ஈரான் தலையிடத் தேவையில்லை என்று ஷெய்குல் அஸ்ஹர் அஹ்மத் அத்தீப் அவர்கள் ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நஜாதிடம் தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நஜாதுக்கும் ஷெய்குல் அஸ்ஹர் அஹ்மத் அத்தீபுக்குமிடையிலான சந்திப்பின் பின்னர் அல்அஸ்ஹர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

Monday, February 4, 2013

திஹாரியில் சுதந்திர தினம்


ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் பூர்த்தியடைகின்ற நிலையில் அதனை கொண்டாடுவதில் இலங்கை வாழ் மக்கள் மும்முராக ஈடுபட்டு  வருகின்றனர் இந்த வகையில் திஹாரிய மக்களும் சுதந்திர  தினத்தை முன்னிட்டு தமது வீடுகளிலும் கடைகளிலும் தேசிய கொடிகளை தொங்க விட்டிருந்தனர்.

திஹாரியில் தேசிய கொடி விற்பனை தொடர்பாக வியாபாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், தேசிய கொடிகள் அதிகம் விற்பனையானதாகவும் சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

Saturday, February 2, 2013

'லா தஹ்ஸன்' நூலின் விற்பனை 10 மில்லியன் பிரதிகளையும் தாண்டிவிட்டது

புத்தகத்தின் அட்டை

சவூதி அரேபிய இஸ்லாமிய அழைப்பாளர் ஆஇல் கர்னீ எழுதி 'லா தஹ்ஸன்' (கவலைப்படாதே) என்ற நூலின் விற்பனை 10 மில்லியன் பிரதிகளையும் தாண்டி விட்டதாக அண்மையில் நடந்த கெய்ரோ சர்வதேச புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்ட குறித்த புத்தகத்தின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வகையில் அதிக பிரதிகள் விற்பனை செய்யப்பட்ட அரபு நூலாக இது இடம்பிடித்திருக்கிறது.

இது பற்றி அல்அரேபியா செய்தி நிறுவனத்துக்கு கருத்துத் தெரிவித்த ஆஇல் கர்னி, 30 மொழியில் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகவும், இந்த புத்தம் குறித்து ஜேர்மன் பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஒரு கலாநிதிப்பட்ட ஆய்வு நடாத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சுதந்திர தினம் ஓர் இஸ்லாமியப் பார்வை: அஷ்ஷெய்க் யூஸுப் (முஃப்தி)