Tuesday, February 5, 2013

வளைகுடா நாடுகளது விவகாரங்களில் ஈரான் தலையிடத் தேவையில்லை: ஷெய்குல் அஸ்ஹர் தெரிவிப்பு



வளைகுடா நாடுகளது விவகாரங்களில் ஈரான் தலையிடத் தேவையில்லை என்று ஷெய்குல் அஸ்ஹர் அஹ்மத் அத்தீப் அவர்கள் ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நஜாதிடம் தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நஜாதுக்கும் ஷெய்குல் அஸ்ஹர் அஹ்மத் அத்தீபுக்குமிடையிலான சந்திப்பின் பின்னர் அல்அஸ்ஹர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.


ஈரான் வளைகுடா நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும், அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நாடுகளில் ஷீஆ ஊடுறுவலை நாம் புறக்கணிக்கிறோம்,  அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நாடான எகிப்தில் அதன் மக்களுக்கும் இளைஞர்களுக்குமிடையில் ஷீஆக் கொள்கையைப் பரப்பும் முயற்சிகளில் ஈடுபடுவதை நாம் புறக்கணிக்கிறோம் என்றும் ஷெய்குல் அஸ்ஹர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment