Thursday, December 27, 2012

ஈரானின் பெண் அமைச்சர் பதவி நீக்கம்

மர்ழியா வஹீத்

ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நஜாத் அந்நாட்டு அரசாங்கத்தின் ஒரே ஒரு பெண் அமைச்சரான சுகாதார அமைச்சர் மர்ழியா வஹீத் தஸ்தத்ரஜியை நேற்று (27.12.12) வியாழக்கிழமை பதவி நீக்கம் செய்துள்ளதாக ஈரானி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பதவி நீக்கத்துக்கான காரணங்கள் ஏதும் சுட்டிக்காட்டப்படாததோடு, அமைச்சின் வேலைகளுக்காக தற்காலிகமாக முஹம்மத் ஹுஸைன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.



ஈரான் இஸ்லாமியக் குடியரசின் 34 வருட வரலாற்றில் ஒரே ஒரு பெண் அமைச்சரான இவர், முக்கியமான மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கான பணத்தை சேமித்துக்கொள்ள முடியாமல் போனது குறித்து தனது சகாக்களை விமர்சித்ததன் பின்னரே இந்த நிகழ்வு நடந்துள்ளது.

No comments:

Post a Comment