Thursday, December 27, 2012

ஈரானின் பெண் அமைச்சர் பதவி நீக்கம்

மர்ழியா வஹீத்

ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நஜாத் அந்நாட்டு அரசாங்கத்தின் ஒரே ஒரு பெண் அமைச்சரான சுகாதார அமைச்சர் மர்ழியா வஹீத் தஸ்தத்ரஜியை நேற்று (27.12.12) வியாழக்கிழமை பதவி நீக்கம் செய்துள்ளதாக ஈரானி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பதவி நீக்கத்துக்கான காரணங்கள் ஏதும் சுட்டிக்காட்டப்படாததோடு, அமைச்சின் வேலைகளுக்காக தற்காலிகமாக முஹம்மத் ஹுஸைன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tuesday, December 25, 2012

திஹாரியும் குப்பையும்: ஒரு செய்தி!

தொடங்க போக்கலே குப்பய பத்திதாக் பேச வேண்டிய நெலம! தார்ட செல்லவன்?!

சரி, எல்லாருக்கும் ஒன்னாவது ஏன்ட ஸலாத்த செல்லிக் கொளுகுறன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

திஹாரி வந்து கொழும்பு கெண்டி ரோட்ல கொழும்பிலீந்து வர போக்கல ஈக்கிய ஒன்னாவது முஸ்லிம் ஊர். சனத்தொக 15,000 என்டு ஒரு சேர் சென்ன. போர்த்துக்கேய ஆக்கள் கொழும்புகு 1505 ல வந்து எறங்கின டைம் அங்கீந்த முஸ்லிம் ஆக்களுக்கு கொடும செஞ்ச. அப்ப அங்கீந்த முஸ்லிம் ஆக்கள் திஹாரிக்கு வந்து ஊடுகள கெட்டிகொண்டு வாழ தொடங்கினாம். இபிடிதானாம் திஹாரிகி முஸ்லிம் ஆகள் வந்தென்டு செல்லுற.

சரி விஷயத்துக்கு வரோம்!

Monday, December 24, 2012

எகிப்திய தேர்தலின் உத்தியோகபூர்வ பெறுபேறுகள் இன்று மாலை அறிவிக்கப்படும்



புரட்சிக்குப் பிநதிய எகிப்தின் புதிய யாப்பு மீதான பொதுஜன வாக்கெடுப்பின் உத்தியோகபூதர்வ பெறுபேறுகள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளன. தேர்தலைக் கண்காணிப்பு செய்த தேர்தல்களுக்கான உயர் குழு இன்று மாலை நடாத்த இருக்கின்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இது அறிவிக்கப்படவுள்ளது.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த குறித்த இந்தக் குழுவின் தலைவர் ஸமீர் அப்துல் மஆதி இன்று மாலை (எகிப்திய நேரத்தின்படி) 7 மணிக்கு உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகள் அறவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Sunday, December 23, 2012

புதிய யாப்பை அனைத்து சமாதான வழிகளையும் பயன்படுத்தி வீழ்த்த முயற்சிப்போம்: ஹம்தீன் ஸபாஹி



புரட்சிக்குப் பிந்திய எகிப்தின் புதிய யாப்புக்கான பொதுஜன வாக்கெடுப்பில் யாப்புக்கு ஆதரவாக 63.6% ஆனோர் வாக்களித்திருப்பதாக உத்தியோகபூர்வமற்ற தேர்தல் பெறுபேறுகள் தெரிவிக்கின்ற நிலையில், இந்த யாப்பை வீழ்த்துவதற்கான அனைத்து சமாதான வழி முயற்சிகளையும் எடுப்பதாக எகிப்திய எதிரணியான தேசிய மீட்பு முன்னணியின் உறுப்பினர் ஹம்தீன் ஸபாஹி தொவித்துள்ளார்.

புரட்சிக்குப் பிந்திய எகிப்தில் இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றமையால், அவர்களை எதிர்ப்பதற்கு லிபரல்வாதிகள், தேசியவாதிகள், மதச்சார்பற்றோர், முன்னை ஆட்சியின் பங்காளிகள்  தேசிய மீட்பு முன்னணி என்ற பெயரில் ஒன்றிணைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எகிப்தின் புதிய யாப்பு பொதுஜன வாக்கெடுப்பில் வெற்றி!


புரட்சிக்குப் பிந்திய எகிப்தின் புதிய யாப்பு மீதான பொதுஜன வாக்கெடுப்பின் இரு கட்டங்களும் முடிவுற்ற நிலையில் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 63.6% ஆனோர் யாப்பை ஆதரித்து வாக்களித்திருப்பதாகவும் 36.4% ஆனோர் யாப்பை எதிர்த்து வாக்களித்திருப்பதாகவும் தெரியவருகிறது.

முதற்கட்ட வாக்கெடுப்பின் போது 56.3% ஆனோர் யாப்பை ஆதரித்திருந்த போதும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின் போது 70.9% ஆனார் யாப்பை ஆதரித்து வாக்களித்திருந்தனர். வெளிநாடுகளில் வாழும் எகிப்தியர்கள் அளித்த வாக்குகளில் 67.5% ஆனவை யாப்பை ஆதரித்திருந்ததோடு 32.5% ஆனவை யாப்பை எதிர்த்திருந்தன.

எகிப்தின் 27 மாகாணங்களில் கெய்ரோ, மனூபியா ,கர்பியா ஆகிய மாகாணங்கங்களைத் தவிர ஏனைய அனைத்தும் யாப்பை ஆதரித்தே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Saturday, December 22, 2012

எகிப்தின் புதிய யாப்பு மீதான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு ஆரம்பம்!

எகிப்தியர்கள் வாக்களிக்கின்றனர்.

புரட்சிக்குப் பிந்திய எகிப்தின் புதிய யாப்புக்கான பொதுஜன வாக்கெடுப்பின் இரண்டாம் கட்டம் இன்று (22.12.12) சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 17 மாகாணங்களில் நடைபெறுகின்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 25 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள்.

இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு மிகைத்துள்ளதாகக் கருதப்படுகின்ற மாகாணங்களிலேயே இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடாத்தப்படுகின்றது. எனவே, முதற்கட்டத்தைப் போன்று இரண்டாம் கட்டத்திலும் புதிய யாப்பை ஆதரித்துத்தான் பெரும்பான்மையானோர் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, December 21, 2012

காலித் மிஷ்அலின் காஸா விஜயம் சொல்லும் செய்தி



காஸா மீது இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்ட சமீபத்திய வன்முறையைத் தொடர்ந்து ஹமாஸின் 25 வருட பூர்த்தி விழா அண்மையில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அதன் அரசியல் பிரிவுத் தலைவர் காலித் மிஷ்அல் காஸா சென்றமை சர்வதேச அரசியல் நகர்வின் புதிய திசையை சுட்டுவதாக உள்ளது. இந்த நிகழ்வு அரபு வசந்தத்துக்கு முன்னர் நிகழுவதாயின் கடும் இரகசியமாக சில மணிநேரங்களுக்கெ அவரது விஜயம் நிகழ்ந்திருக்கும். ஆனால், அரபு வசந்தத்தின் விளைவுகளை அனுபவிக்கத் தொடங்கியிருக்கும் காஸாவில் இவரது விஜயம் பகிரங்கமாகவே நிகழ்ந்தது.

காலித் மிஷ்அலின் காஸா விஜயம் சில முக்கியமான செய்திகளைச் சொல்கின்றது.


  • காலித் மிஷ்அலை வரவேற்பதற்கு பலஸ்தீனில் செயற்படும் அனைத்துக் குழுக்களும் பெரும்திரளான பொது மக்களும் வருகை தந்திருந்தனர். இந்த நிகழ்வு காலித் மிஷ்அலை ஹமாஸின் பிரதிநிதி என்று மட்டுமல்லாது ஒரு தேசிய ஆளுமை என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது.


  • ஹமாஸ் இயக்கம் மக்கள் அபிமானத்தையும் நம்பிக்கையும் ஆதரவையும் பெற்ற ஒரு இயக்கம். ஹமாஸை எதிர்ப்பவர்கள் ஹமாஸை அங்கீகரிப்பதனைத் தவிர வேறு வழியில்லை.


  • பலஸ்தீன அரசியல் ஒழுங்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) புரிந்து கொண்டு, தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் நலனுக்காகவும் ஹமாஸுடன் நல்லுறவைப் பேண வேண்டும்.


அமீனிய்யாவில் தர்மம் செய்தல் குறித்து குத்பா பிரசங்கம்


இன்று (21.12.12) திஹாரிய, அமீனிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் நிகழ்த்;தப்பட்ட குத்பா பிரசங்கம் தர்மம் செய்தல் குறித்து அமைந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மௌலவி எம். பர்ஸான் அவர்களால் இந்நிகழ்த்தப்பட்ட இந்த குத்பாவில் தர்மம் செய்தல், வீண்விரம் குறித்த பயனுள்ள பல கருத்துக்கள் பேசப்பட்டுள்ளன.


Thursday, December 20, 2012

இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரு பொதுப் பிரச்சினையாக முன்வைக்க வேண்டும் - பொறியியலாளர் அப்துர்ரஹ்மான்


பொறியியலாளர் அப்துர்ரஹ்மான்
இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகவன்றி ஒரு பொதுப் பிரச்சினை என்ற வடிவில் முன்வைக்க வேண்டும் என நல்லாட்சிக்கான மக்கள இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார். கடந்த 12.12.12 ல் மீள்பார்வை ஊடக மையம் கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் 'இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்த நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Wednesday, December 5, 2012

அரபு வசந்தமும் இஸ்லாமிய இயக்கமும் - சில குறிப்புக்கள்








இந்த ஆண்டின் முதற்கூறுகளில் அரபுலக புரட்சிகள் மிகவும் வேகமாகப் பரவத் தொடங்கின. எகிப்தின் தஹ்ரீர் சதுக்கம்யெமனின் தக்யீர் சதுக்கம் என்பன அன்றாட செய்திகளில் அதிகம் உச்சரிக்கப்படும் சொற்களாயின. முஸ்லிம,; முஸ்லிம் அல்லாதோர் என அனைவரும் மத்திய கிழக்ககை நோக்கி தமது கவனங்களை குவிக்கத் தொடங்கினர். அப்போது சிலர் இதனை இஸ்லாமியப் புரட்சி என்றும் வேறு சிலர் மதச்சார்பற்றவர்களின் புரட்சி என்றும் பேசலாயினர். இருப்பினும்இன்று அரபுலக புரட்சிகளில் அதிகம் இலாபமடைந்தது இஸ்லாமியவாதிகளே என்பது தெளிவாக தெரிகின்றது. தூனிஸியாமொரொக்கோஎகிப்து ஆகிய நாடுகளின் தேர்தல் முடிவுகள் இதற்கான சிறந்த சான்றுகள். இந்தப் பின்னணியோடு இஸ்லாமிய உலகில் செயற்படும் சில இஸ்லாமிய இயக்கங்கள் குறித்த சில அறிமுகங்களை நோக்குவோம்.

Saturday, December 1, 2012

எகிப்தின் புதிய யாப்புக்கான வாக்கெடுப்பு டிசம்பர் 15ம் திகதி



புதிதாக எழுதப்பட்டுள்ள எகிப்தின் யாப்பை இந்த டிசம்பர் 15ம் திகதி பொதுஜன வாக்கெடுப்புக்கு விடும்படி எகிப்து ஜனாதிபதி கலாநிதி முஹம்மத் முர்ஸி வேண்டியுள்ளார். இந்த யாப்பு எகிப்தில் ஜனநாயக ஒழுங்கைக் கட்டியெழுப்புவதில் முதற் கல்லாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித இயல்பினை நோக்கி...


ஷஹீத் சையித் குதுப்
தமிழில்: அஷ்-ஷெய்க் எஸ்.எச்.எம் ஃபழீல்

இஸ்லாமிய சிந்தனை
ஓக்டோபர்-டிசம்பர் 2001




'நிச்சயமாக அல்லாஹ் (அத்ல்) நீதி செலுத்துமாறும் (இஹ்ஸான்) நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்குக் கொடுத்துதவுமாறும் (உங்களுக்குக்) கட்டளை பிறப்பிக்கிறான். மேலும் (பஹ்ஷாஉ) மானக்கேடான காரியங்கள், (முன்கர்) பாவச் செயல்கள், (பக்ய்) அத்துமீறல்கள் என்பவற்றில் ஈடுபட வேண்டாம் எனத் தடுக்கிறான். நீங்கள் நினைவுகூர்ந்து சிந்திப்பதற்காக இவ்வாறு உபதேசம் செய்கிறான்.'
(அந்நஹ்ல்: 90)


அல்குர்ஆன் எனும் வேதநூல் ஓர் உம்மத்தை உருவாக்க, ஒரு சமூகத்தை ஒழுங்குற அமைப்பதற்காக வந்ததாகும். அதுமட்டுமன்றி ஒரு பிரத்தியேகமான ஓர் உலகை அது கட்டியெழுப்ப வந்ததாகும். அது முன்வைக்கும் தூது சர்வதேச தன்மை கொண்டது. முழு மனித சமூகத்துக்குமானது. எனவே, ஒரு கோத்திரத்திற்காக, குழுவுக்காக இனத்துக்காக பக்கச்சார்பாக, ஓரவஞ்சனையாக நடப்பது அதன் போக்கல்ல. முhறாக 'அகீதா' எனும் நம்பிக்கைக் கோட்பாடு மட்டுமே சகலரையும் பிணைக்கும் கயிறாயவும் தளமாகவும் அமையும். ஆதற்காகவே மனிதன் உழைக்க வேண்டும். ஆதற்குச் சார்பாகவே சிந்திக்க வேண்டும். ஆதனை ஏற்றவர்களைக் கொள்கைவழி சகோதரர்களாகக் கணித்து அவர்களைப் பிணைக்கும் அம்சங்களை அவர்கள் மத்தியில் வளர்க்க அந்தக் குர்ஆன் முயற்சி செய்கிறது.

அரபு இஸ்லாமிய வசந்தத்தை முன்கொண்டு செல்லும் ஜனாதிபதி மூர்ஸியின் அதிரடி நடவடிக்கைகள்



-மஸிஹுதீன் இனாமுல்லாஹ்-
எகிப்தின் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி அதிரடியாக அறிவித்துள்ள அரசியலமைப்பு அறிவித்தல்கள் எகிப்திலும் சர்வதேச அரங்கிலும் முஸ்லிம் உலகிலும் கணிசமான கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது, உண்மையில் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம்  ஏற்பட்ட அரபு வசந்தம் கொண்டு வந்த அரசியல் மாற்றங்கள் எகிப்தில் முழுமை பெறாமல் இருந்தமைக்குப் பின்னால் இருந்த பிரதான தடைகளை நீக்குவதற்கு இவ்வாறான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதனைத் தவிர அதிபர் மூர்ஸியிற்கு வேறு வழிகள் இருக்க வில்லை என்றே கூற வேண்டும்.
அரபு வசந்தம் வெற்றியின் விளிம்பில் இருக்கும் பொழுது இடம் பெற்ற உள்ளக இராணுவ சதியொன்றின் மூலமே ஹுஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப் பட்டார்,புரட்சியை காவு கொண்ட உயர் இராணுவ கவுன்ஸில் நயவஞ்சகத்தனமாக முன்னால் சர்வாதிகாரியின் எச்ச சொச்சங்களினதும்  பிராந்திய சர்வதேச எஜமானர்களினதும் தேவைகேற்ப அரபு வசந்தத்தைக் கையாண்டனர், பல மாத இழுத்தடிப்புக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப் பட்ட பாராளுமன்ற கீழ் சபையை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவர முன்னரே கலைத்து விட்டனர்.