Wednesday, September 5, 2012

அல்ஜீரியாவைச் சேர்ந்த குடும்பமொன்று தமது குழந்தைக்கு முஹம்மத் முர்ஸி என்று பெயர் சூட்டியுள்ளது

எகிப்தின் புதிய ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி அவர்கள் பதவியேற்றதன் பின்னைய அவரது செயற்பாடுகளை கௌரவிக்கும் முகமாக அல்ஜீரியாவைச் சேர்ந்த குடும்பமொன்று தமது குழந்தைக்கு முஹம்மத் முர்ஸி என்று பெயர் சூட்டியுள்ளது.

அல்ஜீரிய தலைநகரிலிருந்து 630 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வாதி என்ற பிரதேசத்தைச் சேர்ந்த இந்தக் குழந்தையின் தந்தை தனது மகனது பெயரை பதிவு செய்யச் சென்றபோது எகிப்திய ஜனாதிபதி முஹம்மத் முர்ஸியை கௌரவிக்கும் முகமாக இந்தப் பெயரை தனது மகனுக்கு சூட்டுவதாகத் தெரிவித்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எகிப்தில் பெண்கள் சுதந்திரமாக தாங்கள் விரும்பிய ஆடையை அணியலாம்

இளம் நிறம் கொண்ட ஸ்கார்ஃபை அணிந்து ஃபாத்திமா நபீல் வாசித்த மதியச் செய்தி எகிப்தின் வரலாற்றில் புதிய மைல் கல்லாக அமைந்தது. எகிப்தை பீடையாக பீடித்திருந்த முன்னைய சர்வாதிகார ஆட்சிகளில் பெண்கள் தலையை மறைக்கும் ஸ்கார்ஃப் அணிவதற்கு எழுதப்படாத சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது.

பெண்களுக்கு தலையை மறைக்காத உரிமை வழங்குகிறோம் என்ற போலி சுதந்திரத்தை காட்டி தங்களது மேற்கத்திய எஜமானர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே எகிப்திய சர்வாதிகாரிகளின் போக்கு அமைந்திருந்தது.