Saturday, December 22, 2012

எகிப்தின் புதிய யாப்பு மீதான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு ஆரம்பம்!

எகிப்தியர்கள் வாக்களிக்கின்றனர்.

புரட்சிக்குப் பிந்திய எகிப்தின் புதிய யாப்புக்கான பொதுஜன வாக்கெடுப்பின் இரண்டாம் கட்டம் இன்று (22.12.12) சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 17 மாகாணங்களில் நடைபெறுகின்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 25 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள்.

இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு மிகைத்துள்ளதாகக் கருதப்படுகின்ற மாகாணங்களிலேயே இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடாத்தப்படுகின்றது. எனவே, முதற்கட்டத்தைப் போன்று இரண்டாம் கட்டத்திலும் புதிய யாப்பை ஆதரித்துத்தான் பெரும்பான்மையானோர் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



முதற்கட்ட வாக்கெடுப்பில் 57% ஆனோர் புதிய யாப்பை ஆதரித்தே வாக்களித்தாக உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகள் தெரிவிக்கிக்கின்றன. இரண்டாம் கட்டத் தேர்தலும் முடிவடைந்த பின்னரே உத்தியோகபூர்வ பெறுபேறுகள் வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment