Wednesday, September 5, 2012

அல்ஜீரியாவைச் சேர்ந்த குடும்பமொன்று தமது குழந்தைக்கு முஹம்மத் முர்ஸி என்று பெயர் சூட்டியுள்ளது

எகிப்தின் புதிய ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி அவர்கள் பதவியேற்றதன் பின்னைய அவரது செயற்பாடுகளை கௌரவிக்கும் முகமாக அல்ஜீரியாவைச் சேர்ந்த குடும்பமொன்று தமது குழந்தைக்கு முஹம்மத் முர்ஸி என்று பெயர் சூட்டியுள்ளது.

அல்ஜீரிய தலைநகரிலிருந்து 630 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வாதி என்ற பிரதேசத்தைச் சேர்ந்த இந்தக் குழந்தையின் தந்தை தனது மகனது பெயரை பதிவு செய்யச் சென்றபோது எகிப்திய ஜனாதிபதி முஹம்மத் முர்ஸியை கௌரவிக்கும் முகமாக இந்தப் பெயரை தனது மகனுக்கு சூட்டுவதாகத் தெரிவித்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
வாதி என்ற இந்த பிரதேசம் அல்ஜீரியாவில் அல்இக்வானுல் முஸ்லிமூன் இயக்கமாகக் கருதப்படுகின்ற சமாதான சமூக இயக்கத்தவர்கள் மிகப் பரந்தளவில் வியாபித்திருக்கின்ற ஒரு பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிரதேசத்தை 2004ம் ஆண்டு எகிப்தின் தற்போதைய ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி தரிசித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment